முருகன் தமிழ் கடவுளா? என திருமாவளவன் கேள்வி! தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டது குறித்தும் சர்ச்சைப் பேச்சு!

0
21

முருகன் தமிழ் கடவுளா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இந்து மதத்தை குறி வைத்து அவர் தாக்கிப்பேசி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்துக்களை சீண்டும் வகையில் திருமாவளவன் மீண்டும் பேசியுள்ளார். திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு அப்பனுக்கும், அம்மாவுக்கும் பிறந்த முருகன் தமிழ் கடவுள் என்றால், விநாயகர் ஹிந்தி கடவுளாக எப்படி இருக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார். முருகனை தமிழ் கடவுள் என்று தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டு விட்டால், நாம் தமிழர்களாக தலை நிமிர்ந்து விடுவோமா? என்றும் திருமாவளவன் கேட்டுள்ளார்.

சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்துவதை திருமாவளவன் வாடிக்கையாக வைத்துள்ளார். கோயில்களை இடித்து புத்த விகாரங்களை கட்ட வேண்டும், ராமர் என்ற ஒருவரே இல்லை, இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகள், இந்துக்களை சாதிரீதியாக பிரித்தவர் கிருஷ்ணர்(கிறிஸ்துமஸ் விழாவில் பேச்சு), குவி மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று அளவுக்கதிமான சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார்.

அதேநேரம், கிறித்துவத்தில் இருக்கும் சாதிய வேறுபாடுகளை பற்றி திருமாவளவன் வாய்திறக்கமாட்டார். தாழ்த்தப்பட்டோருக்கு கலைஞர் பிச்சை போட்டதாக ஆர்.எஸ். பாரதி கூறியபோதும், தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார், நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா? என்று பத்திரிகையாளர்களிடம் தயாநிதி மாறன் கேட்டபோதும், திருமாவளவன் மவுனித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry