சரியான நேரத்துல தரமான OFFER-ஐ அறிவித்த BSNL… ரூ.399க்கு அன்லிமிடெட் பிளான்! அதிக வேலிடிட்டி உடன் ப்ரீபெய்டு திட்டம்!

0
120
BSNL prepaid recharge plans are popular among users in tier II and tier III circles in the country, who seek a good value on their mobile recharge. BSNL Rs 399 prepaid plan gives 80 days validity, check similar plans from Airtel, Jio and Vi.

3.00 Mins Read : ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளன. அதேநேரம், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், அந்த மூன்று தனியார் நிறுவனங்களும் மிரளும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல்லை பாய்காட் செய்துவிட்டு பிஎஸ்என்எல் சேவையில் இணையுங்கள் என்கிற பிரச்சாரம் சமூக ஊடங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் இதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

தனியார் நிறுவன போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டண உயர்வால் அவதிப்படும் கஸ்டமர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஹை-ஸ்பீட் இண்டர்நெட் சேவையின் கீழ் மான்சூன் டபுள் தமாகா ஆபர் (Monsoon Double Bonanza Offer) என்கிற லிமிடெட்-டைம் ஆபர் (Limited-Time Offer) ஒன்றை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை அதன் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் மீது கிடைக்கிறது. இந்த புதிய சலுகையின் கீழ், சந்தாதாரர்கள் இப்போது மாதத்திற்கு வெறும் ரூ.399 ஃபைபர் பேஸிக் திட்டத்தை பெறலாம். அதாவது இந்த திட்டத்தின் கட்டணம் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.

Also Read : 100 கோடியைத் தாண்டிய வசூல்..! பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’! OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா ஆபரின்கீழ் ஃபைபர் பேஸிக் பிளான் ஆனது முதல் மாதத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் (FTTH) சேவையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளுக்கு ஏற்ற அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சேவையாகும்.

தற்போதைய இண்டர்நெட் கனெக்ஷனை மாற்ற அல்லது அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த லிமிடெட்-டைம் ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், விரைவாக செயல்படவும். இந்த சலுகை எப்போது முடிவடையும் என்கிற தேதி அல்லது காலம் பற்றி பிஎஸ்என்எல் எதையும் குறிப்பிடவில்லை. ஃபைபர் பேஸிக் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த சலுகையின் கீழ், பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.399 க்கு கிடைக்கும், அதன் பிறகு வழக்கமான கட்டணமான ரூ.499 க்கு கிடைக்கும்.

நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டா 80எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும். அதன் பின்னர் 4 எம்பிபிஎஸ் என்கிற ஃபேர் யூசேஜ் பாலிசி (FUP) ஸ்பீட் கிடைக்கும். இதுதவிர்த்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

Also Read : சனி வக்ர பெயர்ச்சி! 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சனியால் வரப்போகும் அதிரடி மாற்றம்! பரிகாரம் செய்ய வேண்டிய 9 நட்சத்திரங்கள்!

இந்த சலுகையை பெறுவது எப்படி? பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப் வழியாக 1800-4444 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம். பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கை பிராட்பேண்ட் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் மத்தியில் வருகிறது, கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் இதுபோன்ற சந்தாதாரர்களை ஈர்க்கும் சலுகைகள் பிஎஸ்என்எல்-க்கு இன்னும் பலத்தை தரலாம்.

பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட புதிய கஸ்டமர்களை ஈர்க்க தனது எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் 2 வகையான இலவசங்களை வழங்குகிறது. ஒன்று – இலவச வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router); இரண்டாவது – இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation). இவ்விரு இலவசங்களையும் பெற வாடிக்கையாளர்கள் அரையாண்டு திட்டம் அல்லது வருடாந்திர திட்டத்தை (Semi-annual plan or Annual plan) தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அப்போது தான் நிறுவனத்திடமிருந்து இலவச வைஃபை ரூட்டரை பெறுவதற்கும், இலவச நிறுவலுக்கும் தகுதியுடையவர்கள் ஆவீர்கள்.

இதனிடையே, ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) போன்ற தனியார் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தை உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை(BSNL Rs 249 prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. அந்த திட்டங்களின் நன்மைகளையும் இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா மட்டும் தான் பெறமுடியும். அதேபோல் ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. ஜியோசினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்குன்னு தெரியுமா? ரூ.2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை..! De Activate பண்ண இதமட்டும் செஞ்சா போதும்!

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் விங்க் மியூசிக் இலவச ஹலோ ட்யூன் மற்றும் பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஆகவே ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry