கொரோனா தடுப்பூசிப் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம்! அமித் ஷா திட்டவட்டம்!

0
18

தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக களமிறங்கி உள்ளது. தாகூர்நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசினார். அப்போது, “பாகிஸ்தான் பிரிவினை மற்றும் வங்காளதேசம் உருவாக்கத்தின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மதுவா சமூகத்தினர் வாழும் அந்த பகுதியில், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

மோடி அரசு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கியதால் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன், இந்த சட்டம் அமல்படுத்தப்படும். இந்த சட்டத்தின்கீழ் மதுவா சமூகத்தினர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதுஎன அமித் ஷா உறுதியளித்தார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்வதே சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம். இந்தச் சட்டம் அமலானால், இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளால் தவறான தகவல் பரப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் திமுக நிதியுதவியுடன் போராட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதேநேரம், சிறுபான்மையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நாடுமுழுவதும் நடைபெற்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry