பெட்டி தூக்கிக்கொண்டு குடும்பத்துடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும் ‘ஸ்டாலின்’! ரேஸில் முந்தும் ‘எடப்பாடி பழனிசாமி’!

0
21

பேக் வழிகாட்டுதலில், தி.மு.. தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் பிரச்சார களத்தில், .தி.மு.. முன்னேறி வருகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, பேக் சொல்லும் விதவிதமான தலைப்புகளில், ‘ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராம சபை என ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரைப்போன்று உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களது பிரச்சாரம், குறை தீர்க்கும் கூட்டமாக அமையவில்லை என தி.மு..-வினர் புலம்புகின்றனர்.

அதேநேரம்ஹாட்ரிக்வெற்றி பெறும் முயற்சியில் இறங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, களத்தில் தனி ஒருவராக கெத்து காட்டிவருகிறார். பிரச்சாரத்தின்போது, “மக்கள் தரும் மனுக்களுக்கு, தி.மு.., ஆட்சி அமைந்த, 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் சொல்கிறார். எங்கள் ஆட்சியில், 1100 என்ற எண்ணை அழுத்தினால் போதும்; மக்கள் குறைகள் தீர்க்கப்படும். எதற்கு மனு?” என முதலமைச்சர் கேள்வி எழுப்புகிறார். கிராமம், கிராமமாகப் போய், ஸ்டாலின் பெட்டி வைக்கிறார். மக்கள் கொடுக்கும் மனுவைக் கூட, ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்த வேளையில், அதை இப்போதே செய்கிறோம் என, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். இதனால் நிலைகுலைந்த திமுக, நாங்கள் சொல்லித்தான் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்தார் எனக்கூறி மனதை தேற்றிக்கொண்டது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பேக் நிறுவனம் பிரச்சார வியூகங்களை வகுத்துக்கொடுத்தாலும், ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் சென்றடையவில்லை என தி.மு.வினரே வேதனைப்படுகின்றனர். வேன் மூலம் தனி ஆளாக சுற்றிச் சுழலும் எடப்பாடி பழனிசாமிக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இவருக்கு  கவுன்ட்டர் கொடுப்பது எப்படி என ஐபேக் டீம் திணறி வருகிறது.

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் செல்லும் பல பிரச்சார கூட்டங்களுக்கு, நிர்வாகிகள் பணம் கொடுத்து ஆட்களை திரட்டுவதாக கூறப்படுகிறது. திருத்தணி அருகே அம்மையார்குப்பத்தில் (ஸ்டாலின் வெள்ளி வேல் ஏந்திய ஊர்) கிராமசபை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ரூ.200-க்கான டோக்கன் கொடுக்கப்பட்டதாகவும், 600 பேருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதேபோல் திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் மஞ்சள் வண்ண டோக்கன் கொடுத்தே ஆள் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்த மூவரும் செல்லும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்தே ஆட்களை திரட்ட வேண்டியிருப்பதாக திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர். 

சசிகலாவை இயக்குவதே ஸ்டாலின்தான் என்ற சந்தேகத்துக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனையும் கதறவிடுகிறார். “தினகரன் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், .தி.மு..,வை ஒருபோதும் உடைக்க முடியாது. அவர்கள் கனவு பலிக்காது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்எனப் பேசி பழனிசாமி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். அதேநேரம், சசிகலாவின் சகோதரர் திவாகரனை அரவணைத்து, கட்சி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå