பெண்கள் குறித்து அவதூறு பேச்சு! விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!

0
9

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்து தர்மம் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என திருமாவளவன் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, இந்து தர்மப் படி (மனு தர்மம்) எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது எல்லா தரப்பு பெண்களுக்கும் பொருந்தும். சனாதன தர்மம் இதை சொல்கிறது என அவர் பேசி உள்ளார்.

Read & Watch :https://twitter.com/CTR_Nirmalkumar/status/1319453100965441536

இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. எம்.பி.யாக இருக்கும் அவர், இது போன்ற ஒரு கருத்தை ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிராக பேசுவது முறையல்ல என பலரும் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான கெருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு வலியுறுத்தி உள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்என்ற கேள்வியையும் அவர முன்வைத்துள்ளார். கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்க வேண்டாமா எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சை கருத்து வெளியிட்ட திருமாவளவன் மீது பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததன் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry