கடலில் பேனா நினைவுச் சின்னம்! மத்திய அரசு முதல் கட்ட அனுமதி! பொதுமக்கள் கருத்து கேட்க அறிவுறுத்தல்!

0
109

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் ரூ.80 கோடி செலவில் தமிழக அரசு சார்பில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read : ஆ.ராசா கூறியது திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry