இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை! செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

0
152

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் நடப்பது பெருமையாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்களை வரவேற்கிறேன். நேரு உள்விளையாட்டு அரங்கிற்குபன்னாட்டு பெருமை சேர்க்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் மோடி.

Also Read : இந்தியாவின் சதுரங்க சக்தி தமிழகம்! சதுரங்க வல்லபநாதர் கோவிலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு!

இந்த போட்டியை துவக்க பிரதமரை நேரில் அழைக்க திட்டமிட்டிருந்தேன். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார்கள். என்னை நலம் விசாரித்த அவர்களிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன். அவர் பெருந்தன்மையோடு சொன்னார் ‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் – நான் நிச்சயம் கலந்து கொள்வேன் – இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா’ என்று பிரதமர் குறிப்பிட்டார்கள்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இங்கே வருகை புரிந்திருக்கிறார்கள். Your presence has enhanced the magnitude of this function and I thank you for making it. I convey my heart-felt thanks to Hon’ble Union Sports Minister Anurag Thakur and other officials for providing all help and support to conduct this event in Tamil Nadu.

செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. ஆனால், கோவிட் மற்ற பிரச்னைகளால் நடத்த முடியாமல் போனது. இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழகத்தில் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டேன். மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.

பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய 18 மாதங்கள் ஆகும். ஆனால், தமிழக அரசு 4 மாதங்களில் செய்துள்ளது. இப்போட்டியின் மூலம் தமிழக விளையாட்டுத் துறை மட்டுமல்ல சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர உள்ளது. தமிழக அரசின் மதிப்பு மேலும் மேலும் உயர உள்ளது. இது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு. அதனால் உயர்வு ஏற்பட்டுள்ளது.

துவக்க விழா இங்கு நடந்தாலும் போட்டி முழுமையாக மாமல்லபுரத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

மாமல்லபுரம் இந்திய கட்டடக் கலையின் அருங்காட்சியகம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.102 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த போட்டியை துவக்கி வைக்க வருகை தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

கருப்பு வெள்ளை மைதானமாக காட்சி தருவது சதுரங்கம். கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகை ஆட்டக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை செஸ் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் தான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. தமிழகம் தான் இந்தியாவில் செஸ் தலைநகரமாக உள்ளது. ஒரு காலத்தில் செஸ் அரசர்களின் விளையாட்டாக இருந்து, மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது. செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல. அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை இந்தியாவில் மேலும் பரவ செய்ய இந்த போட்டி உறுதுணையாக இருக்கும். கல்வியில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். இதற்கு இந்த போட்டி உறுதுணையாக இருந்திருக்கும். செஸ் ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும்”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry