Chennai Air Pollution! சென்னையில் எகிறும் காற்று மாசு! தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பகீர் தகவல்!

0
45
(PM) emissions in Chennai could increase considerably by 2030 if no preventive steps are taken | Getty Image

மாசற்ற காற்று என்ற மையக் கருத்தை முன்வைதது இந்திய அளவிலான உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையமானது (Center for Study of Science, Technology, and Policy (CSTEP), காற்று மாசுபாடு ஆய்வு மையம் (Centre for Air Pollution Studies (CAPS)) அமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 23-25 வரை இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ICAS இன் ஐந்தாவது பதிப்பில், நிலையான வளர்ச்சிக்கான தூய்மையான காற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் மிக லட்சியக் கொள்கையான மிஷன் லைஃப்-ஐயும் ஆராயத் திட்டமிட்டுள்ளோம். காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு, பொது சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும் வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மந்தமாக்குகிறது மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Also Read : டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கப்போகும் டிவிஎஸ் எக்ஸானிக்!

இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களுக்கான காற்று மாசு பட்டியலை CSTEP தயாரித்துள்ளது. இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் சென்னையில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 27% அதிகரிக்கும்.

2019-20 ஆம் ஆண்டில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விவரப்பட்டியலின் (Emissions Inventory) அடிப்படையில் ஆய்வு ஒன்றை CSTEP மேற்கொண்டது. இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

INDIA CLEAN AIR SUMMIT 2023

இந்த ஆய்வின்படி, சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கிறது. மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல், தற்போது உள்ளபடியே தொழிற் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் 2030- ம் ஆண்டு வாக்கில் சென்னையில் அதிகபட்சமாக 27 விழுக்காடும், திருச்சியில் 25 விழுக்காடும், மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என்று CSTEP ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 விழுக்காடும், மதுரையில் 27 விழுக்காடும், சென்னையில் 27 விழுக்காடும், தூத்துக்குடியில் 20 விழுக்காடும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள CSTEP மையத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர். ப்ரதிமா சிங், “எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசைக் குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைக்கலாம்” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry