குழந்தைகளுக்கு வெற்றியை மட்டுமல்ல தோற்கவும் கற்று கொடுக்க வேண்டும்! ராணிப்பேட்டை ஆட்சியர் பேச்சு!

0
161

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறந்த பள்ளிகள், சிறந்த ஆசிரியர்கள், மாவட்ட அளவில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற விழாவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராகவும், சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் எம்.மாணிக்கசாமி கெளரவ விருந்தினராகவும் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக காட்பாடி சிருஷ்டி பள்ளி தாளாளர் எம்.எஸ்.சரவணன், இந்து தமிழ் திசை நாளிதழ் பொதுமேலாளர் டி.ராஜ்குமார், டிவிஎஸ்எஸ்சி சாலமன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முன்னாள் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி உரையாற்றிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆசிரியர் பணி போற்றத்தக்கது. நமக்கு வழிகாட்டும் ஆசிரியர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்.

Also Watch : சுயலாபத்திற்காக ஏன் இப்படி செய்ய வேண்டும்? Babu Murugavel Ex MLA

ஒரு நாட்டை அழிக்க நினைத்தால் அந்நாட்டின் நூலகத்தை அழித்தால் போதும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வெற்றியை மட்டுமல்ல தோற்க கற்று கொடுக்க வேண்டும்.
பின் தோல்வியிலிருந்து மீண்டு வர கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகளை அவர்கள் வழியில் வளர வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry