சீன அரசை எதிர்த்ததன் எதிரொலி! அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா சிறையில் உள்ளாரா? அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாரா?

0
17

உலக கோடீஸ்வரரான அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக பொது தளத்தில் தோன்றாமல் இருக்கிறார். சீன அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததில் இருந்துதான் அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி சீன அரசாங்கத்தின் ஒழுங்குமுறை ஆணையம், நிதி அமைப்புகளின் செயல்பாடுகளை ஜாக் மா கடுமையாக விமர்சித்தார். அடகு கடை போலவும், முதியோர் கிளப் மாதிரியும் அரசு நிதி நிர்வாகம் செயல்படுகிறது எனவும் அவர் சாடினார். இதையடுத்து, சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் Ant Group .பி.வை சீனா தடை செய்ததுடன், விசாரணையையும் முடுக்கிவிட்டது. அதேபோல் Ant Group-ன் ரூ. 3,700 கோடி மதிப்பிலான பங்குகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த நவம்பர் மாதம் முடக்கியதுடன், ஜாக் மா வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தார்

அதுமுதலே சீன கம்யூனிஸ்ட்டின் கண்காணிப்பு வளையத்தில் ஜாக் மாவும், அலிபாபா குழுமமும் கொண்டுவரப்பட்டது. அலிபாபா தொழில் கொள்கையை ஏற்றுக் கொண்டால், பிற நிறுவனங்கள் வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் என சீன அரசு கவலை கொண்டதாக அரசு ஆதரவு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. சிங்கம்போல போற்றப்பட்ட ஜாக் மா, தற்போது வில்லனாகவும், தீய சக்தியாகவும், ரத்தத்தை உறிஞ்சும் பேயாகவும் வர்ணிக்கப்படுகிறார்.

கடந்த நவம்பர் மாதம், புதிய தொழில் முன்வோரை கண்டறியும் வகையில், அலிபாபா குழுமம் நடத்தும் ‘Africa’s Business Heroes’ என்ற நிகழ்ச்சியின் நடுவவராக ஜாக் மா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென ஜாக் மா பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதில், குழும நிர்வாகி லூசி பெங் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதுமுதலே ஜாக் மாவை காணவில்லை. எனவே, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம், அல்லது கம்யூனிச அரச பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா விகாரத்தில் அரசுக்கு எதிராக கருத்து தெரித்த மிகப்பெரும் தொழிலதிபரை இதுவரை காணவில்லை. எனவே,  இரண்டு மாதங்களாக ஜாக் மாவை காண முடியவில்லை என்பது கவலை அளிப்பதாக உலக தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலிபாபா என்பது உலகப் புகழ்பெற்ற நிறுவனம் என்பதால், ஜாக் மாவுக்கு என்னவாகி இருக்குமோ என்று உலகமே பதற்றத்தில் இருக்கிறது. இந்தப் பதற்றத்தை, சீன அரசும், அலிபாபா நிறுவனமும் தணிக்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry