கார்ப்பரேட் விவசாயத்தில் கால்பதிக்கும் திட்டம் இல்லை! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு!

0
73

தங்கள் நிறுவன தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்கள், வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை, பஞ்சாப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாக்கி வருகின்றனர். முக்கியமாக, ஜியோ நிறுவனத்தின் 1,500 தொலைத் தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், “வன்முறையாளர்களால், தங்களது ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட உத்தரவிட வேண்டும். இரண்டு மாநிலங்களில் தங்களது துணை நிறுவனங்களின் விற்பனை மற்றும் சேவை நிறுவனங்களும் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், காழ்ப்புணர்ச்சியும், தொழில் போட்டியுமே இதற்குக் காரணம். டெல்லி அருகே நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு, தங்களது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதில் அடிப்படை உண்மை இல்லை. வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தெடர்பும் இல்லை, அந்தச் சட்டங்கள் மூலம் தங்கள் நிறுவனங்கள் எந்த வகையிலும் பயனடையப்போவதில்லை” என்று கூறியுள்ளது.

அதேபோல், ரிலையன்ஸ் ரீடெய்ல் உள்பட அதனுடன் தொடர்புடைய எந்த நிறுவனங்களும், கடந்த காலங்களில்ஒப்பந்தம்அல்லதுகார்ப்பரேட்விவசாயத்தை மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற வணிகத்தில் நுழைய தங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை. ரிலையன்ஸ் ரீடெய்லானது, விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களையும் நேரடியாக வாங்குவதில்லை. நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்களும் செய்ததில்லை.  குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எங்களை விநியோகஸ்தர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் அல்லது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடன் தொடர்புடைய நிறுவனங்கள், கடந்த காலங்களில், எந்தவொரு கார்ப்பரேட்அல்லதுஒப்பந்தவிவசாயத்தையும் செய்யவில்லை, இந்த வணிகத்தில் நுழைய எந்தத் திட்டமும் இல்லை. ரிலையன்ஸ் அல்லது அதன் துணை நிறுவனங்கள் எந்தவொரு விவசாய நிலத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பஞ்சாப், ஹரியானாவில் அல்லது இந்தியாவில் வேறு எங்கும்கார்ப்பரேட்அல்லதுஒப்பந்தவிவசாயத்திற்காக வாங்கவில்லை. அவ்வாறு செய்யும் எந்த திட்டமும் இல்லை.” என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry