கந்தபுராணத்தை மாற்றி தேர்தல் பிரசார பாடல்! தி.மு.க.வுக்கு எதிராக ஆத்திகர்கள் கொந்தளிப்பு!

0
80

கந்தபுராண வரிகளை மாற்றி தேர்தல் பிரச்சார பாடல் வெளியிட்டுள்ள தி.மு..,வுக்கு, கண்டனம் வலுத்து வருகிறது. கடவுளை மறுக்கு திமுக எதற்காக கந்தபுராணத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திகர்கள் கொந்தளிக்கின்றனர்.

கந்தபுராணத்தில், ‘வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்என்ற மங்கல வாழ்த்து பாடல் இடம் பெற்றுள்ளது.இதில்மன்னன் கோன்முறை அரசுஎன்பதைமைந்தன் கோன்முறை அரசுஎன்றும், ‘நான்மறை அறங்கள் ஓங்கஎன்பதைஐம்பெரும் அறங்கள் ஓங்கஎன்றும், ‘நற்றவம் வேள்வி மல்கஎன்பதைநன்னெறி தொழில்கள் மல்கஎன்றும், ‘மேன்மைகொள் சைவ நீதிஎன்பதை, ‘மேன்மைகொள் சமூக நீதிஎன்றும் பாடல் வரிகளை மாற்றி, தி.மு.., தேர்தல் பிரசாரத்துக்காக, வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. இதில் மைந்தன் கோன்முறை அரசு என்று வரும்போது கருணாநிதி, ஸ்டாலின் படம் இடம்பெற்றுள்ளது.

திமுகவின் இந்த செயல் ஆத்திகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமசுக்கும் விழா எடுக்கும் திமுக, இந்து மத கடவுளர்களை ஏற்க மறுக்கிறது. அப்படியிருக்கும்போது, கந்தபுராணத்தில் சில வார்த்தைகளை மாற்றி பிரச்சார பாடல் வெளியிடுவது, கந்தபுராணத்தையே அவமதிப்பதாக உள்ளது. இதற்கு திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் வலியுறுத்துகின்றனர்

திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், “கந்தபுராண பாடல் தேசிய கீதத்தை போன்று உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைபடுத்தும் விதமாக அந்த பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry