பொங்கலுக்கு மலர்கிறது ‘ஏழிலைப்பாலை’! மணக்க, மயக்க முன்பதிவுக்கு முந்துங்கள்!

0
77

ஒரு நூலை வாசகர்கள் படிப்பார்கள். அதை விமர்சிப்பார்கள், கொண்டாடுவார்கள். பின் அடுத்த நூலுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலைப்படித்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் முகநூல் வாயிலாகவும், வாட்ஸ் அப் வாயிலாகவும் இணைந்தனர்.

பலர் முகநூலில் வேள்பாரியையொட்டி பின்கதைகள் எழுதினர். தமிழ்ச் சங்கமாக உருவெடுத்தனர். பல சேவைகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, அவர்களுக்குள் எழுதக் கூடிய திறமையானவர்களைக் கண்டறிந்து ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்ற, அப்படி உருவானது தான் இந்த ஏழிலைப்பாலை சிறப்பு மலர்.

4 அளவில் வழவழ காகிதத்தில், 260 பக்க வண்ண மலராக மலர்கிறது இம்மலர். முதன் முறையாக தனது எழுத்தை அச்சில் பார்க்கும் எழுத்தாளர் முதல், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வரை இம்மலரில் பங்களிப்பு செய்துள்ளனர். இம்மலர் தயாரிப்புக்கான செலவை வாசகர்களே பகிர்ந்து கொண்டிருக்கிறனர்.

நான்கு நூல்கள் வாங்குபவருக்கு இலவசமாக ஒரு நூலும், தங்கள் ஊர் நூலகத்திற்கு இந்நூலை பரிசளிக்க விரும்புகிறவர்கள், ஒரு நூல் வாங்கினால் மற்றொன்றை இலவசமாக பெற்று அன்பளிப்பாக அளியுங்கள். வாசகர்களுக்கு பாட்டாபிறை பதிப்பகத்தின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

முன்பதிவு விலை 250 ரூபாயாகும். முன்பதிவுக்கு G – pay – 9944041999. பணம் அனுப்பியவர்கள் தங்களின் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரியை வாட்ஸ் ஆப் மூலம் 9944041999 என்ற எண்ணுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும்.

ஓவியர் மணியம் செல்வத்தின் அட்டைப்படத்துடன் வெளிவர இருக்கும் இந்நூலில், எழுத்தாளரும், எம்.பி.,யுமான சு.வெங்கடேசனின் பளீர் சுளீர் கேள்வி பதில்கள், மணியம் செல்வத்துடன் உரையாடல், மருத்துவர் கு.சிவராமனின் அனுபவக் கட்டுரைகள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் கார்த்திக் நேத்தா, கவிஞர் இசையின் அற்புதமான கவிதைகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனின் சூழலியல் கட்டுரை, எழுத்தாளர் நீலா மற்றும் பேச்சாளர் மானசீகனின் வசீகரிக்கும் கதைகள், தொழிலதிபர் திருப்பதி வாசகனின் பாங்காங் பயணக் கட்டுரை, இவற்றுடன் பல படைப்பாளர்கள் விருந்துகள் படைக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry