போராட்டம் நடத்திய பாஜகவினரையும், கைது செய்ய வந்த போலீஸாரையும் தாக்கிய டிஎஸ்பி! தேனியில் பெரும் பரபரப்பு!

0
57

தேனியில், சனாதன எதிர்ப்பு பேரணிக்கு, எதிராகத் திரண்ட பாஜகவினரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அடித்து, திட்டி கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பாஜகவினர் தெரிவித்து உள்ளனர்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் 145ஆம் ஆண்டு சமூக நீதி நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, சனாதனத்திற்கு எதிராகச் செயல்படும் திராவிடர் கழகத்தினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் தேனி நேரு சிலை பகுதிக்கு வந்தனர்.

Also Read : வாழும் பெரியார் ஈபிஎஸ்! பெண் உரிமையை குழி தோண்டி புதைத்த ஸ்டாலின்! அதிமுக குற்றச்சாட்டு!

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராகவும், திராவிடர் கழகத்திற்கு எதிராகவும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டபோது, பாஜகவினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாஜகவினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

அப்போது தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து, சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று அவர்களை வாகனத்தில் ஏற்றியதாகத் தெரிகிறது. இதனால் பாஜகவினர் டிஎஸ்பி பார்த்திபனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பாஜகவினரை கைது செய்யும்போது காவலர்களையும் அவர் அடித்தது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி சேகரிப்பில் இருந்த செய்தியாளர்களையும், வரம்பு மீறி ஒருமையில் பேசி டிஎஸ்பி நடந்து கொண்டதாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக காவல்துறை தலைவரும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டாங்கரேவும், டிஎஸ்பி பார்த்திபனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். தவறினால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry