காங்கிரஸ் நிறுவன தினம்! சோனியா காந்தி ஏற்றிய கொடி கீழே விழுந்ததால் அதிர்ச்சி! பரபரப்பு வீடியோ!

0
69

காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின விழாவின் போது சோனியா காந்தி கட்சி கொடியை ஏற்றியபோது, கொடி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கொடி கீழே அவரது கைகளில் வந்து விழுந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கிருந்த தொண்டர்கள், கொடியை எடுத்து சரி செய்து கொண்டு சென்றனர். பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சிக் கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தினேஷ் மோங்கியா பாஜக-வில் இணைந்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தினேஷ் மோங்கியா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry