இணை நோய் உள்ள 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! என்னென்ன ஆவணங்கள் தேவை?

0
63

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “2022 ஜனவரி 3-ம் தேதி முதல், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளதுஎன்றார்.

Also Watch:- கொரோனாவோட வாழ பழகிக்கனும்~ஒமிக்ரான் மாதிரி இன்னொரு வைரசும் வரும்|Virologist Dr. Pavitha

இந்நிலையில் இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா விளக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ”மத்திய அரசு வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்திக்கொள்ள, இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, கோவின் தளத்தில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். இரு டோஸ் ஏற்கெனவே செலுத்திய முதியோர், இணை நோய்கள் இருந்தால், அதற்குரிய சான்றிதழையும் கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது, இணைநோய்கள் இருப்பது குறித்து அதிகாரபூர்வ மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று தடுப்பூசி மையத்துக்குச் செல்ல வேண்டும். மற்ற வகையில் 2 தடுப்பூசி செலுத்தியபோது கடைப்பிடிக்கப்பட்ட அதே வழிமுறைகள்தான் இப்போதும் பின்பற்றப்படும்.

நீரிழிவு நோய், சிறுநீரகம் தொடர்பான நோய், டயாலிசிஸ், சுவாசுக் குழாய் நோய், ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்ட், புற்றுநோய் உள்ளிட்ட 20 வகையான இணை நோய்கள் இருப்போர் இருக்கிறார்கள். இவர்கள் வரும்போது, அதிகாரபூர்வ மருத்துவ அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்என்று சர்மா தெரிவித்தார்.

Also Read:- ஒமைக்ரான் அபாயம்! மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது! தடுப்பூசி மட்டுமல்ல, தற்காப்பும் அவசியம்!

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த குறைந்தபட்ச கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கால இடைவெளி குறித்து இதுவரை மத்திய அரசு தரப்பில் அதிகாரபூர்வமான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே, முதல் இரண்டு டோஸ் எந்த நிறுவன(கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்) தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்களோ, அதே நிறுவன தடுப்பூசியையே பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry