பரந்தூர் விமான நிலையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்!

0
99

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 13 கிராமப்பகுதியில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Also Read : 13 மாநிலங்களில் அதிரடி சோதனை! PFI அமைப்பினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது!

புதிய பசுமை விமான நிலையத்திற்கு ஏகனாபுரம் கிராமத்தை சுற்றி மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளதால் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தினந்தோறும் குறிப்பாக இரவு நேரங்களில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் 58வது நாளான நேற்று இரவு ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். “வேண்டாம் வேண்டம் விமான நிலையம் வேண்டாம்”, “அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே”, “அமைத்திடு அமைத்திடு புதிய விமான நிலையத்தை மாற்று இடத்தில் அமைத்திடு”, “வெளியேற மாட்டோம் வெளியேற மாட்டோம் எங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம்” என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

Also Read : விமான நிலையத்துக்கு எதிராக 55வது நாளாக போராட்டம்! அரசு இரட்டை கொள்கையை கையாளுகிறதா என திருமா கேள்வி!

அத்துடன், விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏகனாபுரம், நெல்வாய், மேலேரி, நாகப்பட்டு ஆகிய நான்கு கிராமங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. ஏகனாபுரம் கிரமாத்தில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தாலும், விமான நிலையம் அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry