வரும் 16-ந் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்! முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு செலுத்த மத்திய அரசு முடிவு!

0
4

வரும் 16-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டகோவேக்ஸின்கொரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்தகோவிஷீல்ட்தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry