இந்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாதிகள் 300 பேர் பலி! பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஒப்புதல்!

0
20

இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டார்கள் என்று, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான ஜாஃபர் ஹிலாலி தெரிவித்திருக்கிறார். இது பாகிஸ்தான் அரசையும், இந்திய எதிர்க்கட்சிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

புல்வாமாமல் தீவிரவாதிகளால் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட்டில் நுழைந்து இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் தங்கள் தரப்புக்கு எந்த இழப்பும் இல்லை என பாகிஸ்தான் கூறிவந்தது.

இந்நிலையில், பாலாகோட் வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டது உண்மைதான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான ஜாஃபர் ஹிலாலி தெரிவித்திருக்கிறார்.

உருது தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், “’இந்தியா 2019 பிப்ரவரி 26 அன்று சர்வதேச எல்லையைத் தாண்டி போர் போன்ற ஒரு தாக்குதலைச் செய்தது, அதில் குறைந்தது 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அவர்களின் உயர் அதிகாரிகளை குறிவைக்க முயற்சித்தோம். எங்கள் இலக்கு அவர்களின் தலைமையகம். ஆனால் கால்பந்து மைதானங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதனால்தான் அவர்கள் அதை மீண்டும் செய்வார்கள் என்று இந்தியா கூறுகிறது. எங்கள் பதிலடி பலவீனமாக இருந்ததுஎன்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå