இட ஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்படும் MBC பிரிவினர்? சாதிச் சான்றிதழ் முறைகேடுகளை தடுக்க பிரத்யேக யோசனை! 

0
320

இட ஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்கள் உள்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வஞ்சிக்கப்படுவதாக புகைச்சல் எழுந்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்கபிரத்யேகமானதொரு யோசனையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

முதலில், MBC இட ஒதுக்கீடு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதனை பற்றி பார்ப்போம். இதில் புரிதல் இருந்தால் தான் MBC அட்டவணையில் உள்ள சாதிகள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது புரியவரும்.

இட ஒதுக்கீடு சதவிகிதம் எப்படி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் (MBC/DNC) பட்டியல் வகுப்பினர் (SC), பழங்குடியினர் (ST) என்ற பகுப்பின்படி 2001-ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு பிரிவிலும், விகிதாச்சாரங்கள் இத்தனை சதவிகிதம் இருக்கும் என்ற அடிப்படையில் (population extrapolation) அனுமானித்து, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

எந்த அடிப்படை தரவை வைத்து 2001-ம் ஆண்டு வாக்கில் வகுப்புகளின் மக்கள் தொகை இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டதுஎன்றால், அதற்கான விடை அம்பாசங்கர் அறிக்கை. இதன்படி தமிழக மக்கள் தொகை 4,99,907,43. அதாவது 5 கோடிக்கும் சற்றே குறைவு. இந்த அடிப்படை தரவை வைத்தே 2001-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

1.248% மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கும் என்ற அடிப்படையில் அனுமானித்து (projection) எடுத்த தரவின்படி, மக்கள் தொகை 6,24,056,79  என்று வரும். முறையே 2001-ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 6.24 கோடியாக (624.06 லட்சம்) இருக்கும் என்று அனுமானிக்கப்பட்டது. 6.24 கோடி மக்கள் தொகையை வைத்தே விகிதங்கள் கணக்கிடப்பட்டு இப்போது வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. சரி இதில் என்ன கோளாறு

அம்பாசங்கர் அறிக்கையின்படி உள்ள மக்கள் தொகை விகிதம்

வகுப்புகள்மக்கள் தொகை (லட்சத்தில்)மொத்த மக்கள் தொகை விகிதம்இட ஒதுக்கீடு விகிதம்
BC2331932946.60%30%
MBC1059586321.19%17%
DNC15661363.13%3%
SC/ST999814920%19%
மற்றவர்கள்45112669.08%--
மொத்தம்49990743100%69%

 1.248% இருக்கும் என்ற அனுமானத்தின்படி

வகுப்புகள்மக்கள் தொகை அதிகரிப்பு 1.248% (உண்மையான தரவாக இருந்திருக்க வேண்டியது)மக்கள் தொகை அதிகரிப்பு 1.248% (கணக்கு காட்டப்பட்ட தரவு)
BC2911056028793980
MBC1322728910877310
DNC19550772146755
SC/ST1248113612508825
மற்றவர்கள்56316158078809
மொத்தம்6240567962405679

MBC மக்கள் தொகை கணக்கில் கோளாறு

வகுப்புகள்வகுப்பு வாரியாக மறைக்கப்பட்ட அல்லது அதிகரிக்கப்பட்ட மக்கள் தொகை விவரம்சதவிகித கணக்கில் இழப்பு
BC-316580-0.05%
MBC-2349979-8.35%
DNC191678+0.33%
SC/ST27689+0.01%
மற்றவர்கள்2447194+0.68%

MBC பிரிவில் 24 லட்சம் பேர் மறைப்பு!

2.91 கோடியாக (291.11 லட்சம்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்ட இனத்தவரின் மக்கள் தொகை, 2.879 கோடி (287.93 லட்சம்) என்று குறைத்து காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 3,16,580 குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை சதவிகித கணக்கில் எடுத்துக் கொண்டோமேயானால் -0.05% அளவுக்கு இந்த வகுப்பினருக்கு நஷ்டம்.

1.322 கோடியாக (132.27 லட்சம்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்திருக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவரின் மக்கள் தொகை பெருவாரியாகக் குறைக்கப்பட்டு, 1.087 கோடி (108.77 லட்சம்) என்று காட்டப்பட்டு உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 23,49,979 குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை சதவிகித கணக்கில் எடுத்துக் கொண்டோமேயானால், ஏறக்குறைய -8.35% அளவுக்கு வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் கணக்குகள் பலமான இரண்டு கேள்வியை எழுப்புகின்றன.

கேள்வி-1  – 19.55 லட்சம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்திருக்க வேண்டிய சீர்மரபினரின் மக்கள் தொகை, 21.46 லட்சம் என்று அதிகரித்து காட்டப்பட்டுஉள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் சீர்மரபினரின் எண்ணிக்கை சுமார் 1,91,677 ஆக அதிகரித்து கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏன்?

கேள்வி-2 – மக்கள் தொகையில் 21.3%-க்கும் அதிகமாக உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கை 17% என்று குறைத்து கணக்கில் எடுக்கையில்சீர்மரபினரின் உண்மையான மக்கள் தொகை விகிதமான 3.13%-, 3% என்று ஏறக்குறைய அப்படியே கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

சீர்மரபினர் என்பார் யார்?

பூகோளப் பகுதிகளின் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் சீர்மரபினரை வரையறுத்தனர். குறிப்பிட்ட இடங்களில் வசிக்கக் கூடிய கள்ளர்மறவர்முத்தரையர்மிகச்சில ஊர்களில் வசிக்கக்கூடிய படையாட்சிகள்சீர்மரபினராக அடையாளப்படுத்தப்பட்டனர். அதாவதுமிகவும் பிற்படுத்தப்பட்டோர்பிற்படுத்தப்பட்டோர் என்கிற இரண்டு பிரிவுகளிலும் உள்ள 68 சாதியினரில், அரசு குறிப்ப்பிட்ட சிலர் மட்டுமே இந்த சீர் மரபினர் வகுப்புக்குள் வருவார்கள்.

உதாரணமாககள்ளர்ஈசநாட்டு கள்ளர்கந்தர்வகோட்டை கள்ளர் -(தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைத் தவிர), கூட்டப்பால் கள்ளர் (புதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளிகருர்மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர), பிரமலை கள்ளர் (சிவகங்கைவிருதுநகர்ராமநாதபுரம்மதுரைதேனிதிண்டுக்கல்புதுக்கோட்டைதஞ்சாவூர்நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் தவிர), பெரியசூரியூர் கள்ளர் (திருச்சிராப்பள்ளிகருர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைத் தவிர) பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அரசு ஆவணங்களின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூகோளத்தில் வராத கள்ளர்களும்அவர்களின் உட்பிரிவுகளும் சீர்மரபினர் வகுப்புகளாக அறியப்படுவர் என்று தெளிவாக அரசு ஆவணம் இருக்கிறது. இங்கேயும் இரண்டு கேள்விகள் எழும்புகின்றன.

கேள்வி-1 : இதில்பிற்படுத்தப்பட்ட வகுப்பாக பூகோள ரீதியாக அடையாளப் படுத்தப்பட்டவர்வேறு பூகோளத்தில் போலியாக தங்களை சீர் மரபினர் என்று காட்டி சாதிச் சான்றிதழ் வாங்குவதாக பரவலாகப் புகார் எழுப்பப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா?

கேள்வி-2சீர் மரபினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஒருங்கிணைக்கப்பட்டே 20% அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள் தொகையில் 3.13% மட்டுமே உள்ள சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மீத 17%-லும் பெரிய பங்கை எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு நெடுங்காலமாக உள்ளது. இதில் உண்மை உள்ளதா?

இதுநாள் வரை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் சாதி வாரியாக எந்தெந்த தனிப்பட்ட சாதிக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது என்ற தகவலை கொடுக்க துறைகள் முன்வராமல் மறுத்து வந்துள்ளதும் பெரிய சந்தேகத்தை கிளப்பும் விதமாகவே உள்ளது. அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகள் அனைத்தும்முக்கியமாக வன்னியர்மீனவர், வலையர்மருத்துவர்போன்ற வகுப்பினர் இந்த கூற்றில் உண்மை இருக்குமோ என்று பலமாக சந்தேகம் எழுப்புகின்றனர். தங்களது இட ஒதுக்கீடு உரிமை இதனால் பறிபோவதாக புகார் எழுப்பி கொந்தளிக்கின்றனர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள்.

சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

–       தற்போது உள்ள இடஒதுக்கீடு 20% MBC பிரிவில்  MBC பிரிவிற்கு  17% DNC  பிரிவிற்கு 3% என்று உள்ளது. சீர்மரபினரை தனிப்பிரிவாக (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோடு கலக்காமல்அறிவித்துஅவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3% இட ஒதுக்கீட்டை தனியாகவே வழங்கலாம் என்று கருத்து முன்வைக்கப்படுகிறது.

–       MBC பிரிவில் வன்னியர் மக்கள் தொகை மட்டுமே 61.4%. விகிதாச்சார முறைப்படி அவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு MBC (V) 12%-13% வரை வழங்கலாம்.

–       அருந்ததியருக்கு 3.5% தனி ஒதுக்கீடு செய்தது போல மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளை செயல்படுத்துவதிலும் சட்டத்தில் இடமுண்டுதடை ஏதும் இருக்கப் போவதில்லை. அதனை மாநில அரசே செய்யலாம்.

–       சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திஇடஒதுக்கீட்டை மறு சீரமைப்புக்கு உட்படுத்தி கேரளகர்னாடக மாநிலத்தில் உள்ளது போன்ற முறைமையை இங்கேயும் செயல்படுத்தலாம்.

–       சாதி வாரியாக எந்தெந்த சாதிக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்தால் சிக்கல்களை தீர்க்க ஏதுவாக இருக்கும். இதில் வெளிவரும் உண்மை கசப்பாக இருப்பினும்தொலைநோக்குப் பார்வையில் பார்க்கும்போது இந்த கசப்பு மருந்து சமூகத்திற்கு அவசியம் தேவைப்படும் ஒரு அருமருந்து என்பதை உணரவேண்டும்.

அதிகரித்துவரும் போலி சாதிச் சான்றிதழ் பிரச்சனை

பிற்படுத்தப்போட்டோர் பட்டியலில் உள்ள சிலர், மிகவும் பிற்படுத்தப்போட்டோர் பட்டியலில் உள்ள சில சாதி பெயர்களை பயன்படுத்தி, மிகவும் பிற்பட்டோர் என (MBC) சாதிச் சான்றிதழ் வாங்குவதாகவும்,  அதே போல பிற்படுத்தப்போட்டோர் பட்டியலில் இல்லாத முற்பட்ட இனத்தை (Other Caste / General) சேர்ந்த சிலர், பிற்படுத்தப்போட்டோர் பட்டியலில் உள்ள சில சாதி பெயர்களை பயன்படுத்தி பிற்பட்டோர் (BC) சாதிச் சான்றிதழ் வாங்குவதாகவும்குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இப்படி அரசை ஏமாற்றி சான்றிதழ் பெறுவதைத் தடுக்கசாதிச் சான்றிதழுடன்ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது உடனுக்குடன் சாதி குறித்த தரவையும் ஆதார் எண்ணுடன் நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த fool proof முறை மூலம் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதுடன்உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

Author: Mr. Ganesh, Social Activist. Views are personal.

Previous Post: புதுச்சேரி அரசியலில் அதிரடித் திருப்பம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா? வேல்ஸ் மீடியா பிரத்யேகத் தகவல்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå