கொரோனா பாதிப்பு இப்போதைக்கு குறையாது! இறப்பு விகிதம் 5% அதிகரிப்பு! WHO எச்சரிக்கை!

0
34

கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிவேகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தைத்தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறதுஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனோம்,  பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவதாகின்றனர், ஆனால் அது தவறு.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம். நிரூபிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம். சமூகமும், பொருளாதாரமும், பயணமும்,, வர்த்தகமும் மீண்டும் தொடங்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். நாம் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஏழாவது வாரமாக தொற்று அதிகரித்துவருகிறது. இறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சில நாடுகளில் உணவகங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், சந்தைகள் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கிறது. கூட்டத்தில் சிலர் மட்டும்தான் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிலர் இளமையாக இருப்பதால் கொரோனா பாதிப்பதை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர். ஆனால், கொரோனாவுக்கு அது ஒரு விஷயமல்லஎன்று தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry