மங்களகரமான நாளிலும் பத்திரப்பதிவு! கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு!

0
22

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என பதிவுத்துறை தலைவருக்கு, முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். எனவே மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். அத்தகைய நாள்களில் பத்திரப் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry