மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் Covaxin தடுப்பூசி பாதுகாப்பானது என்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் என்ற பெயரில் Covid-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. செயலிழக்கம் செய்யப்பட்ட சார்ஸ்-CoV2 வைரஸில் இருந்து இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக 18 முதல் 55 வயது வரையிலான, ஆரோக்கியமான, ஆண் மற்றும் கர்ப்பிணி அல்லாத பெண் தன்னார்வலர்கள் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட தன்னார்வலர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனையில் 380 தன்னார்வலர்களும், மூன்றாம் கட்ட சோதனையில் 26000 பேரும் பங்கேற்றனர். இதற்கான சோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry