மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 தொடங்கி, அயோத்தி மகா பூர்ணிமா வரை, ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் பங்களிப்பு இயக்கம் நடத்தப்படும் என்று ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் அஸ்திவார அமைப்பு பணியை கண்காணிக்க நாட்டின் முன்னணி பொறியாளர்கள், கட்டிட அமைப்பு நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவை ராமர் கோவில் கட்டுமான குழு அமைத்துள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் வி.எஸ்.ராஜு தலைமையிலான இக்குழுவில், ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் என்.கோபால்கிருஷ்ணன், சூரத் என்.ஐ.டி. இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி, கவுகாத்தி ஐ.ஐ.டி. இயக்குனர் டி.ஜி.சீத்தாராம், டெல்லி ஐ.ஐ.டி. ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.பட்டாச்சார்ஜி, இந்திய போக்குவரத்துக் கழக ஆலோசகர் ஏ.பி.முல், சென்னை ஐ.ஐ.டி.யின் மனு சந்தானம், மும்பை ஐ.ஐ.டி.யின் பிரதீப்த் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பக்தர்களின் தரும் நிதியைக் கொண்டே கோயில் கட்டுமானங்களை முடிக்க ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி திரட்டுவதற்காக ஒரு இயக்கத்தை முன்னெடுக்க உள்ள அந்த அறக்கட்டளை, நாடு முழுவதும் பிரச்சாரமும் செய்ய உள்ளது. ஜென்மபூமி இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
Shri Ram Janmbhoomi Teerth Shetra is going to start a Mass Contact and Contribution Campaign for construction of a Bhavya & Divya mandir at the birthplace of Bhagwan Shri Ramlalla. The public will also be made aware of the historical significance of the Janmabhoomi Movement.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) December 15, 2020
ராமர் பக்தர்கள் கோடிக்கணக்கானோர் ஜென்மபூமிக்கு எவ்வாறு நன்கொடை அளித்தார்களோ, அதைப் போலவே, பக்தர்களின் தன்னார்வ பங்களிப்புடன் இந்த கோயில் கட்டப்படும் என்று அறக்கட்டளை கூறியுள்ளது. நிதி திரட்டுவதற்காக ரூ.10, 100, 1,000 ஆகிய கூப்பன்கள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை, பழமையான மற்றும் பாரம்பரிய கட்டுமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ராமர் கோயில் கட்டப்படும் என கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry