சற்றுமுன்

சாதனை படைத்து வரும் மாஸ்டர் டீசர்! இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

சாதனை படைத்து வரும் மாஸ்டர் டீசர்! இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. நீண்ட நாட்களாகமாஸ்டர்அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீசர் கொண்டாட்டமாக இருந்தது. வழக்கமாக விஜய் பட டீசர் என்றால் அதில் நிச்சயம் ஒரு பஞ்ச் வசனமாவது இடம்பெறும், ஆனால் மாஸ்டர் டீசரில் விஜய் ஒரு வசனம் கூட பேசியிருக்க மாட்டார். இது முற்றிலும் புதுமையாக இருந்தது.

யூடியூப் தளத்தில்மாஸ்டர்டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்திய அளவில் வெளியான டீசர்களில் அதிக கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை மாஸ்டர் திரைப்பட டீசர் படைத்துள்ளது. மாஸ்டர் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!