உ.பி.யில் நடந்தால் குற்றம்! ராஜஸ்தானில் நடந்தால் புனிதமா? இரட்டை வேடமிடும் காங்கிரஸ், திமுக!

0
16

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட விழுந்து புரளுகிறார் ராகுல்காந்தி. தென் இந்தியாவில் அவருக்கு தோள் கொடுக்கிறார் ஸ்டாலின்.

தற்போதைய நிலையில், அரசியல் ரீதியாக, இந்தியா இருகூறுகளாக பிரிந்து கிடக்கிறது. பா... என்பதைத் தாண்டி, மோடி எதிர்ப்பு, மோடி ஆதரவு. இதில் எதிர்ப்பு என்பது, மோடி எதைச்செய்தாலும் எதிர்போர், செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை என எதிர்ப்போர். ஆக மொத்தம் மோடி கூடாது ரகம்.

மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு பிண அரசியல் செய்கிறது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள். கடந்த மாதம் 14-ந் தேதி உ.பி.யில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், உபி மாநிலம் அமேதி தொகுதியில் மண்ணைக் கவ்விய ராகுல் காந்தி, சமூகப் போராளியாக அரிதாரம் பூசியிருக்கிறார்.

கொரோனா காலத்தில் பெரும் படையை திரட்டிக்கொண்டு ஹத்ராஸ் செல்கிறார். போலீஸ் தடுத்தபோது, (தானே) கீழே விழுந்து எழுந்து அனுதாபம் தேடுகிறார். ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து ஸ்டாலின் கண்டன கூட்டம் நடத்துகிறார், மமதா பேரணி போகிறார். இவர்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பலாத்கார கொலைகள் நடக்கவே இல்லை.

ஓட்டு, சாதி அரசியல் அவர்கள் கண்களை மறைக்கலாம். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியாது, கூடாது. 2019-ம் ஆண்டில், புகார் அளிக்கப்படதன் அடிப்படையிலான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். சராசரியாக ஒருநாளைக்கு 88 பலாத்கார வழக்குகளும், ஒரு ஆண்டுக்கு 32,033 வழக்குகளும் பதிவாகிறது. குறிப்பாக மைனர் பெண்கள் ஆண்டுக்கு சராசரியாக 5,000 பேர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள்.

பாலியல் பலாத்காரங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானுக்கு முதலிடம். அந்த மாநிலத்தில் வருடத்துக்கு 6,000 பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. அடுத்தபடியாக உ.பி.யில் வருடத்துக்கு 3,065, கேரளாவில் 2,023 பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள்

ராகுலை எம்.பி.யாக்கிய கேரளாவில் செப்டம்பர் மாதம் கொரோனா பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலாத்காரம் செய்தார். மேற்குவங்கத்தில் பாலியல் சம்பவங்களை ஆளுநரே பட்டியலிடுகிறார். .பி.யில் 13 வயது சிறுமி, டெல்லி அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது குழந்தை, சத்தீஸ்கரில் 17 வயது இளம்பெண், தமிழ்நாட்டில் 7 வயது குழந்தை, ராஜஸ்தானில் 16 வயது இளம்பெண். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளிச்சத்துக்கு வந்த பலாத்கார சம்பவங்கள்தான் இவை

அதிலும் குறிப்பாக, ஹத்ராஸ் சம்பவத்தைக் காட்டிலும் கொடூரமாக, கடந்த மாதம் 25-ந் தேதி 8 வயதான பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ராஜஸ்தானில் செப்டம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 16 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Source : Minor tribal girl allegedly raped and murdered in Rajasthan’s Sirohi district

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால், இந்த சம்பவம் பற்றி ராகுலும், ஸ்டாலினும் மவுனித்துவிட்டார்கள். இதன் மூலம், அதாவது, சாதி மற்றும் பிண அரசியல் செய்து, .பி.யில் ராகுலும், தமிழ்நாட்டில் ஸ்டாலினும் இழந்த செல்வாக்கை பெற துடிக்கிறார்கள். இவர்களுக்கு நடுநிலை என கூறிக்கொள்ளும் சில ஊடகங்களும் துணையாக இருக்கின்றன.

ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள் மூலம் ராகுலோ, ஸ்டாலினோ தற்காலிகமாக அரசியல் ஆதாயம் தேடலாம். இதன் மூலம் வாக்குகளை பெற்றுவிடலாம் என அவர்கள் நினைத்தால், அது பகல் கனவுதான். சமூக ஊடகங்கள் வியாபித்துள்ள நிலையில், மக்களை ஏமாற்றி நாடகம் போட்டு ஓட்டு வாங்குவது இனியும் சாத்தியமில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry