நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி. அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. போலீஸார் மகா காந்தியிடம் விசாரித்தனர்.
இந்நிலையில், நடிகர் மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒனஅறை தாக்கல் செய்துள்ளார். அதில், “நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதியவும் வேண்டும்.” இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*