திட்டமிட்டபடி இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்! இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு! T20 தொடர்…?

0
40

இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில், தற்போது 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. வரும் 17, 26 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. அதைத்தொடர்ந்து ஜனவரி 11, 14, 16 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. அதன்பின்னர் டி20 தொடர் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக வருகிற 9-ந் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்கிறது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான், உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது. இதன் காரணமாக, இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பி.சி.சி..யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியுடனான  தொடர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்பட தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெளிவுபடுத்தியுள்ளார். 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் 4 டி20 போட்டிகளை மட்டும் பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தரப்பில், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பிசிசிஐ கோரிக்கையை தென்னாப்பிரிக்காவும் ஏற்றுள்ளது. 2 நாளில் T20 தொடருக்கான அட்டவணையை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வெளியிட உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*