வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!

0
56
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக கடற்கரைப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் பகுதியில் மற்றுமொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று காலை 8.30 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. 11 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Also Read : திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வினாத்தாள் முறைகேடு! பேராசியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

அடுத்துவரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்துவரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை ஏதுமில்லை.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில், பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த 1ம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 25 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 30 செ.மீ. ” என்று அவர் கூறினார்.

Also Read : இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முடியாததன் பின்னணி! பிட்ச் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நவம்பர் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

Also Read : சட்டவிரோத மணல் கொள்ளை! 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்! நெருக்கடியில் ஆட்சியாளர்கள்!

நவம்பர் 23 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

நவம்பர் 24 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Also Read : செய்யாறு சிப்காட் சுற்றி நிலங்களை வாங்கி குவித்துள்ள அமைச்சர் எ.வ. வேலு? அரசியலமைப்பை மீறி தமிழக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு!

நவம்பர் 25 ஆம் தேதி மற்றும் நவம்பர் 26 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry