ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து காவல்துறையில் ஆர்டலி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. காவல் நிலைய பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் வீட்டில் பணிகளை செய்வதற்காக பணியமர்த்தபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டலிகள் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Also Read : விமர்சனம் செய்ததால் ஆவேசம்! அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு!
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கில், ஆர்டலி என்ற பெயரில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக காவலர்களை பயன்படுத்துவது குற்றம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டலிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஆர்டலிகளை திரும்ப பணிக்கு அழைக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றி வந்த 19 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்.
Also Read : ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பாக இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலேயரின் ஆர்டலி முறை தொடர்வது வெட்கக்கேடானது எனவும் ஆர்டலி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் டிஜிபி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஆர்டலிகளை திரும்ப பெறாவிட்டால் சம்மந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும் என நீதிபதி எச்சரித்தார்.
Also Read : சுகர் பேஷன்டுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இதை மட்டும் செய்ங்க, உங்க வாழ்வே சிறப்புதான்!
இந்நிலையில் ஆர்டலிகளை திரும்பப் பெறுவது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில், காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சங்கர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக திரும்ப அனுப்புமாறு உத்தரவிட்ட டிஜிபி, மாவட்ட ஏடிஎஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி, டிஜிபி மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக அலுவலக பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும், இதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry