பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
28

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக தெரகிறது.

பரியேறும் பெருமாள்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ்கர்ணன்படத்தின் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு கொடுத்தார். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியானது.

வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தனது அடுத்தப் படமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். இதனை, நேற்றிரவு மாரி செல்வராஜுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, துருவ் விக்ரம் அறிவித்திருக்கிறார். விளையாட்டை மையப்படுத்திய இக்கதையை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவிருக்கிறார் என்று தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெற்றி பெற்றஅர்ஜுன் ரெட்டிபடத்தின் தமிழ் ரீமேக்கான பாலாவின்வர்மாவில்தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமானார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால், ஆதித்யா வர்மாவாக மாற்றி தயாரிப்பு நிறுவனம் வேறு இயக்குநரை வைத்து இயக்கி கடந்த ஆண்டு வெளியிட்டது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பாலா இயக்கியவர்மாவும்வெளியானது. அதுவும், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry