ஜனவரி 1ல் இருந்து அனைத்து கால்களும் இலவசம்! ஜியோ அதிரடி ஆஃபரால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு பிரச்சனை!

0
5

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே, தனிக்காட்டு ராஜவாக வலம் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்களின் கட்டணங்கள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளது. அதிலும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு தான் இலவச அழைப்புகள் என்ற முறையே வந்தது என்று கூட கூறலாம்.

மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஐயூசி என்ற கட்டணத்தை நிர்ணயித்திருந்தது. அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக, இலவச கால் சேவை அளித்துள்ளது. அதாவது ஜனவரி 1, 2021 முதல் இனி எல்லா அழைப்புகளும் இலவசமாக அழைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. எனினும் இது உள்நாட்டு அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறியுள்ளது.

சமீபத்தில் தான் ஜியோ ஐயூசி கட்டணத்தினை வசூலிக்க தொடங்கியது. இது அதன் வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது. இதற்கிடையில் சமீப மாதங்களாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக சந்தாதாரர்களை இணைத்தும் வருகிறது. இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினையும் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சலுகையானது போட்டி நிறுவனங்களான வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்லுக்கு மீண்டும் சிக்கலையே கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ தன் வசம் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியை சமாளிக்கவும் இப்படி ஒரு திட்டத்தினை கொண்டு வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry