கட்டாய ஃபாஸ்டேக் முறைக்கான காலக்கெடு நீட்டிப்பு! பிப்ரவரி 15-ந் தேதிக்குள் FASTag எடுத்தாக வேண்டும் என அறிவிப்பு!

0
31

சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் முறைக்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக FASTag பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், நாடு முழுவதும், அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது FASTag அட்டை கட்டாயம் ஒட்டியிருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது. FASTag இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் 2 மடங்கு கட்டணத்தை அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் கோளாறுகள் முற்றிலும் களையப்படாத நிலையில், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் FASTag முறையை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஓராண்டாக FASTag முறை அமலில் உள்ள நிலையில் 80 சதவீதம் பேர் மட்டுமே, FASTag  மின்னணு அட்டையை பயன்படுத்துவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கட்டாய FASTag முறைக்கான கால அவகாசத்தை வரும் பிப்ரவரி 15-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் கார், லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பிப்ரவரி 15 முதல் FASTag கட்டாயாமாகிறது. அதேநேரம், சுங்கச் சாவடிகளில், FASTag-க்கான வரிசையில், சாதரண வாகனங்கள் கடந்தால், 2 மடங்கு தொகை அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

Also Read :இரண்டு ஆண்டுகளில் “சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”| GPS மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்!

FASTag முறையால் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் உதவியுடன் தானியங்கி தடுப்புகள் விலகும் என்பதால், போக்குவரத்து நெரிசல், காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில், ஆதார் அட்டை மற்றும் வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து FASTag மின்னணு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக FASTag பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Source TOI : Govt extends deadline for use of FASTag till February 15

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry