மக்களை சந்திக்க அஞ்சி ஆன் லைன் அரசியல்! திமுக-வை போட்டுத்தாக்கும் அமைச்சர்!

0
4

களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லாததால் திமுகவினர் ஆன்லைன் அரசியலுக்கு வந்துவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவினர் ஆன்லைன் அரசியல் செய்ய வந்துவிட்டனர். களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லை. கரோனா பணியாக இருந்தாலும், அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலமாக செய்கின்ற அளவுக்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் சுயமாக சிந்திக்கவில்லை. பிரசாத் கிஷோர் என்ற அமைப்பின் மூலம் இயக்கப்படுகின்றனர். நேரடியாக இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். எங்களை இயக்க யாராலும் முடியாது. சுயமாக இயங்குகிறோம். ஆனால்திமுக இயக்கப்படுகின்ற இயக்கம். விலைபேசி ஒரு குழுவிடம் ஒப்படைத்து, அவர்களது வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகின்றனர்.

அவர்களால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அரசியல் அனுபவம் வாய்ந்த துரைமுருகன் உள்ளிட்டோர் மனச்சஞ்சலத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் திமுக உள்ளது. அதிமுக பொருத்தவரை வரை ஜனநாயக முறைப்படி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இயக்கி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சிகளும் இருக்காது. அந்த சலசலப்பு இப்போதே தொடங்கி விட்டது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry