பல் இளிக்கும் இறைமறுப்பு! சாமியாரிடம் ஆசிபெற்ற திமுக பொதுச்செயலாளர்! ஸ்டாலினுக்கு செக் வைப்பதால் பரபரப்பு!

0
79

தி.மு.. பொதுச் செயலர் துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்துடன், மாகதேவ மலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது மகாதேவ மலை. இங்கிருக்கும் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தரை துரைமுருகனுக்கு பல ஆண்டுகளாக பழக்கம்.

வேலூர் எம்.பி. தொகுதி தேர்தலில் தனது மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு விபூதி சாமியார் ஆசியே காரணம் என துரைமுருகன் திடமாக நம்புகிறார். அன்பழகன் மறைவுக்கு பின், துரைமுருகன் தற்போது தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் விபூதி சாமியே காரணம் என அவர் நினைக்கிறார். இதையடுத்து, துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்தும் கடந்த 17- ஆம் தேதி இரவு மாகதேவமலை விபூதி சாமியாரை சந்தித்தனர்.

துரைமுருகனுக்கு ஆளுயர மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து விபூதி சாமியார் வரவேற்றார். அப்போது, ஐய்யாநீங்க சொன்னதைப் போலவே என் பையனும் தேர்தல்ல ஜெயிச்சுட்டான். நானும் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்என்று துரைமுருகனை சொல்ல வாயார வாழ்த்தினாராம் அந்த சாமியார். அதுமட்டுமல்ல, தமிழக அரசின் உச்ச பதவியில், துரைமுருகன் அமருவார் என சாமியார் அருள்வாக்கு கூறினாராம். இதனால் துரைமுருகன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

துரைமுருகன், ஒன்பது முறை எம்.எல்..,வாகவும், மூன்று முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவருக்கு கட்சி தலைவர் பதவியும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியும்தான் இதுவரை கிடைக்கவில்லை. எனவே சாமியார் கூறிய உச்ச பதவி என்ன என்பது, திமுகவினர் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் நடவடிக்கையில் துரைமுருகன் இறங்கிவிட்டாரா என்ற கேள்வியும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, அண்ணா சொன்ன ஒன்றே குலம், ஒருவனே தேவன் முழக்கத்தை உதைத்துத்தள்ளிவிட்டு, இந்து எதிர்ப்பு என்பதில், ஸ்டாலின் உடும்புப்பிடியாக இருக்கிறார். இவரைப்போலவே, மறைந்த க. அன்பழகனும், இறைமறுப்பு, இந்து எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருந்தார்.

அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுள்ள துரை முருகன், யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில், தன் மகனுடன் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றது, இறைமறுப்பாளர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

திமுக பொதுச்செயலாளராக இருக்கும் இவரே, கட்சிக்கொள்கைகளை காலடியில் போட்டு மிதித்தால், மற்றவர்களை நாம் எப்படி விமர்சிக்க முடியும் என கி.வீரமணி, சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன் போன்றோர் புலம்பிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என மக்களை நம்பவைக்க முயற்சிக்கும் நிலையில், அவர்கள் முயற்சிக்கும் நிலையில், ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் பகுத்தறிவு வைத்தியம் செய்துள்ளார் துரைமுருகன்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry