ஆளுநர் உரை ட்ரெய்லர்தான்! நீதிக்கட்சி வழியில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது! பேரவையில் ஸ்டாலின் உரை!

0
4

தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும், வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தி.மு.கழகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போதுஆளுநர் அவர்களது உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டியலின மக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி; திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி; அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணாபேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்! ஏன், இந்த அரசுதமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும்தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது உரையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்

ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்கொள்கைகள்கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். அனைவருக்கும் எளிதில் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒருட்ரெய்லர்மாதிரிமுழு நீளத் திரைப்படம் நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்அதில் எந்தவிதமான சந்தேகமும், யாரும் படவேண்டிய அவசியமில்லஎன்றார். மேலும், தமது உரையின்போது கீழ்கண்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

  • கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும்.
  • மீத்தேன், நியூட்ரினோ.ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். அதேபோல் எட்டுவழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வடமாவட்ட தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
  • தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்; புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &