நம்பரை Save செய்யாமல் Whatsapp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி? Status Video-வை டவுன்லோடு செய்ய ஈஸி வழி!

0
59

வாட்ஸ் அப்பில் நாம் யாராவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் அவர்களின் நம்பரை சேமிக்க வேண்டியதாக இருக்கிறது,அதன் பிறகு தான் மேசேஜ் அனுப்ப முடிகிறது.

ஆனால் நாம் அனைவரின் நம்பரையும் சேவ் செய்ய விரும்புவதில்லை. உதாரணத்துக்கு நீங்கள் இப்பொழுது ஏதாவது ஷாப்பிங் அல்லது ஏதாவது டாக்யூமென்ட் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பர அடிக்கடி தேவை படுவதில்லை. அந்த வகையான நம்பரை நாம் சேவ் செய்ய விரும்புவதும் இல்லை இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேமித்த பிறகு தான் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் அத்தகைய நம்பரை சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பதை பற்றி பார்க்கலாம்.

1. உங்கள் மொபைலில் க்ரோம், அல்லது ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.

2 https://api.WhatsApp.com/send?நம்பர் மேற்காணும் முகவரியை இட்டு என்டர் நம்பர் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது நம்பரை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும்

3 இப்போது எண்டர் அழுத்தவும்.

4 ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.

5 தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.

6 https://wa.me/WhatsAppNumber இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.

7 WhatsAppNumber என்பதற்கு பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

இதேபோல், நண்பர்கள் ஸ்டேடஸில் வைக்கும் வீடியோ நமக்கு பிடித்திருந்தால் அதை டவுன்லோடு செய்ய வழி தெரியாமல் இருந்தோம். அதையும் ஈஸியாகச் செய்ய முடியும். அதற்கு முதலில் உங்கள் மொபைலில் MX Player Install செய்யுங்கள். பிறகு MX Player ஓபன் செய்து இடதுபக்கம் ஸ்வைப் செய்தால், WhatsApp Status Saver என இருக்கும். அதை கிளிக் செய்தால், நண்பர்கள் ஸ்டேடஸில் வைக்கும் வீடியோக்கள் தானாக Save ஆகிவிடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &