மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட் ஃபோன்! செப்டம்பர் 10-ல் விற்பனைக்கு வரும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!

0
4

மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

பின்னர் பேசிய அவர், “இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக கூகுள் க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம். 5ஜிக்கு விரைவாகவும், தடையின்றி மேம்படுத்தவும் ஜியோ தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 5ஜி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்குகிறோம்என்று அவர் கூறினார்.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், வரும் விநாயகர் சதுர்த்தியன்று அதாவது செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து பேசிய கூகுள் சி..., சுந்தர் பிச்சை, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். 4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளிவரும்எனக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &