சூப்பராக வருகிறது சூப்பர் வேக்சின்! அனைத்து கொரோனா வைரஸையும் அழிக்கும் அசாத்திய திறன்!

0
6

கொரோனா வைரஸ், டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் நிலையில், அனைத்து வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் இந்த ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி இரண்டாம் தலைமுறை(second generation) தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.

SARS மற்றும் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையின்போது ஆன்டிபாடிகள் எலிகளில் உற்பத்தியானதாகவும், இது ஸ்பைக் புரதத்தை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் இது தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், இந்தத் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்தும் சரியாக நடந்தால், இந்த மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry