புதுச்சேரியில் தனியார் பள்ளிக் கட்டணம் 25% குறைப்பு! திமுக எம். எல்.ஏ. சம்பத்தின் முயற்சிக்கு பெற்றோர் பாராட்டு!

0
18

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முயற்சியை முன்னெடுத்த திமுக எம்.எல்.ஏ சம்பத்துக்கு பெற்றோர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்கால உத்தரவுப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் 2020-21ஆம் கல்வியாண்டுக் கட்டணமாக, 2019-20ஆம் கல்வியாண்டுக்கான கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 75 சதவீதம் மட்டும் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை எந்தப் பள்ளியும் பின்னபற்றவில்லை என்று புகார் எழுந்தது.

வாழ்வாதாரத்து இழந்து தவித்து வரும் பெற்றோரிடம், பள்ளிக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் வற்புறுத்தி வந்தன. இதனால், பெற்றோர் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில், தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என திமுக எம்.எல்.. சம்பத் குரல் கொடுத்தார்.

மதுக்கடை திறக்க வேண்டும் என பாஜக எம்.எல்.. ஜான்குமாரின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றியதை சுட்டிக்காட்டியிருந்த சம்பத், ஜான்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி, துணைநிலை ஆளுநரிடம் பேசி கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கடந்த 8-ந் தேதி அறிக்கை விடுத்திருந்தார். அத்துடன் நீதிமன்றம் அறிவுறுத்திய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார்.

Also Read : குடிகாரர்களுக்கு வக்காலத்து! பள்ளி கட்டண விவகாரத்தில் மௌனம்! ஜான்குமாருக்கு சம்பத் சரமாரிக் கேள்வி?

இதனைத் தொடர்ந்து கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள் சம்பத், கென்னடி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அனைத்துத் தனியார் பள்ளிகளும் 2021- 22ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணமாக, 2019- 20ஆம் கல்வியாண்டுக்காகக் கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில், 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் வசூலிக்கலாம்.

அத்துடன் வருடாந்திரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், சீருடைக் கட்டணம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கை கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், விளையாட்டு மற்றும் நுண்கலைக் கட்டணம், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் போன்ற வேறு எந்த கட்டணத்தையும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை வசூலிக்கக் கூடாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவி ஒருவரின் பெற்றோர், எல்லோரையும் போல எங்கள் பிள்ளையும் தனியார் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்று விரும்பினோம். கொரோனா பிரச்சனைக்கு முன்புவரை கட்டணத்தை சரியாகத்தான் செலுத்தி வந்தோம். தனியார் துறையில் பணியாற்றும் நான் கொரோனா தொற்று ஊரடங்கால் முழுமையான சம்பளத்தைக் கூட பெற இயவில்லை.

இதனிடையே கல்விக் கட்டணம் கேட்டு பள்ளி நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில்தான் திமுக எம்.எல்.. சம்பத், கட்டண குறைப்புக்காக குரல் கொடுத்ததை நியூஸ் பேப்பர் மூலம் தெரிந்துகொண்டேன். அவரது தொடர் முயற்சியால், அரசு இப்போது 75 சதவிகித கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க சொல்லியுள்ளது. நான் அவரது தொகுதியில்லை. ஆனால், கட்டணக் குறைப்புக்கு சம்பத் எம்.எல்..தான் முக்கிய காரணம் என்பதை மறுக்கமுடியாதுஎன்று கூறினார்கள்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry