தமிழகத்தில் அமலுக்கு வந்த 10 சதவீத EWS இடஒதுக்கீடு! அழகப்பா பல்கலைக்கழகத்தில் EWS அடிப்படையில் மாணவி சேர்க்கை!

0
8

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி துறையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் மாணவி ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரை உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவாகும். ஆனால், தமிழகத்தில் இதனை அமல்படுத்த தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. 10 சதவிகித EWS இடஒதுக்கீடு தமிழக உயர்கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செய்யப்படாது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

எனினும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறதுஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்டெக் பாடப்பிரிவில் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, அந்த பாடப்பிரிவு நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில்மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு உத்தரவு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்போடு  நடத்தப்படுகின்ற பயோடெக்னாலஜி படிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். பயோ டெக்னாலஜி பாடத்திட்டத்தில் உள்ள 10 இடங்களில், ஒரு இடம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினர் வகுப்பைச் சேர்ந்த நிஷா தாண்டா என்கின்ற ஒரு  மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry