1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பத்தை தீர்த்தது தமிழக அரசு!

0
162

கரோனா தொற்று பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக டிசம்பர் பாதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

கோப்புப் படம்

அண்மையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய குறிப்பாணையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும்” என்று அறிவித்துள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

மேலும், 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 1-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry