முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! 2014-ல் இருந்ததுபோல் வரி வசூலியுங்கள்!

0
171

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு பெட்ரோல் மீது ரூ.22.54,  டீசல் மீது ரூ.18.45 என வாட் வரி விதித்துள்ளது. இந்த வாட் வரி 2014-ல் பெட்ரோல் மீது ரூ.15.67, டீசல் மீது ரூ.10.25 என வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலின் மீது விதித்துவந்த கலால் வரி ரூ.32.90லிருந்து ரூ.5 குறைத்து, தற்போது ரூ.27.90 காசுகள் வசூலிக்கிறது. அதேபோல டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைத்து ரூ.21.80 காசுகள் வசூலிக்கிறது.

Also Read : பெட்ரோல்டீசல் விலை உயர்வு! என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? ஏற்குமா தமிழக அரசு?

ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.9.48 எனவும், டீசல் மீது ரூ. 3.57 மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்துவந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில், பெட்ரோல் மீது கலால் வரியை சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீது சுமார் 500 சதவிகிதமும் உயர்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசு மீண்டும் 2014-ல் இருந்த அதே கலால் வரியையே மாண்புமிகு பிரதமர் மோடி மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுபோல் இந்த கருத்தை பிரதமர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும்.

பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது. மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry