ஸ்மார்ட்ஃபோன்களை ஒழிக்கப்போவதாகக் கூறும் எலான் மஸ்க் நம்பிக்கை பலிக்குமா? வாக்கு எந்திரம்(EVM) குறித்தும் முரணாகப் பேசி அம்பலப்பட்ட மஸ்க்!

0
59
Elon Musk Predicts A Future Without Phones; Claims Neuralink Brain Chips Will Take Over | Image Credit: in.mashable.com

BCI (Brain-Computer Interface) சிப்களை உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்கின் உரிமையாளர் எலோன் மஸ்க், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நியூராலிங்கின் சாதனங்கள் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகின்றன, வேறு நகரத்தில் அமர்ந்திருக்கும் அன்புக்குரியவருடன் உடனடியாக பேசுவதற்கான வழியை நியூராலிங்க் வழங்கும். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, அந்த சாதனையை அடைய வாய்ப்பு உள்ளது. ஆனால், நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம்.

எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், “எண்ணங்களின் மூலம் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்த அனுமதிக்க, உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-ஐ பொருத்துவீர்களா?” என்று கேட்டிருந்தார். இதற்கு, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தனது புகைப்படத்தை பகிர்ந்து பதிலளித்துள்ள எலான் மஸ்க், “எதிர்காலத்தில் போன்களே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது.

Also Read : 48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும் அபாயமான பாக்டீரியா! ஜப்பானை அச்சுறுத்தும் தசைத் திண்ணி நுண்ணுயிரி! இந்தியா உள்பட உலக நாடுகள் அச்சம்!

விலங்குகள் மீதான பல வருட சோதனைக்குப் பிறகு, நியூராலிங்க், இந்த ஆண்டு ஜனவரியில் மனித சோதனைகளைத் தொடங்கியது. 30 வயதான நோலண்ட் அர்பாக் என்ற பங்கேற்பாளருக்கு பி.சி.ஐ. பிரெயின் சிப் பொருத்தப்பட்டுள்ளது. நோலண்ட் அர்பாக் இதுதொடர்பான அனுபவத்தை பகிர்ந்திருந்துள்ளார். “எல்லோரையும் போல என்னால் கணினியை இயக்க முடிகிறது” என அவர் தெரிவித்துள்ளார். அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.

பி.சி.ஐ. மூளை சிப்பின் திறனை முழுமையாக மதிப்பிடுவதற்கு நியூராலிங்கிற்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படும். மேலும், பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி சாதனமாக பி.சி.ஐ.யை வழங்க ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால் தகவல்தொடர்புகளை மேற்கொள்ள பி.சி.ஐ. மோடத்தை சோதிக்க அதிக நேரம் தேவைப்படலாம்.

இந்த வார தொடக்கத்தில், எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்.) ஹேக் செய்ய முடியும் என்றும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். எதிர்காலத்தில் நியூராலிங்க்ஸ் ஸ்மார்ட்ஃபோன்களை மாற்றும் என்ற மஸ்க்கின் சமீபத்திய கணிப்புக்கு இந்தக் கருத்து முரணாக உள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையிலும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைச் அனுப்ப / ஏற்க மக்கள் ஏன் தங்கள் தலைக்குள் ஒரு கேட்ஜெட்டை பொருத்த ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி எழும்புகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry