அதிமுக பொதுக்குழு வழக்கு! ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீடு! திங்கள் கிழமை விசாரணை!

0
330

அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.



அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பில், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அன்று பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லது. ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடரும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

Also Read : எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு! என்ன சொல்லியிருக்கிறது ஐகோர்ட்? தீர்ப்பின் விறுவிறு அம்சங்கள்!

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

Also Read : 3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம்! விதி மீறல் நடப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry