இப்படியான அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டாமா? பிரதமரை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி!

0
97

பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், பாஜகவின் அற்பமான மனநிலை பெண்களுக்கு தெரிவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
‘உன்னாவ் வழக்கு – பாஜக எம்எல்ஏவைக் காப்பாற்றுவதற்கான வேலை
கத்துவா வழக்கு – பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி
ஹத்ராஸ் வழக்கு – பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவு
குஜராத் பில்கிஸ் பானு வழக்கு – பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலையும் மரியாதையும்!
இதுபோன்று பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பது, பாஜகவின் அற்பமான மனநிலையை நம் நாட்டு பெண்களுக்குக் காட்டுகிறது.
பிரதமரே, இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டாமா?’

இவ்வாறான கேள்விகளை எழுப்பி ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஆட்சிக்கு எதிராக செயல்படும் பள்ளிக் கல்வி ஆணையர்! ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!

குஜராத் மாநிலத்தில், 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதில், குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை உய்ரநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக குஜராத் அரசு கடந்த திங்கள்கிழமை(ஆக. 15) அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry