காலையில் எழுந்ததும் நாம் எடுத்துக் கொள்ளும் திரவ உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. எனவே காலை நேரத்தில் வழக்கமான காபி, டீக்குப் பதிலாக ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். இதில் எலுமிச்சை கிராம்பு தேநீர் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 50 தொகுதிகளில் வெற்றி பாதிக்கும்! ஆசிரியர் சங்க மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணாமலை எச்சரிக்கை!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த காலம் தொட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தாருங்கள், நம்பிக்கை இழக்க வைக்காதீர்கள்! இது எங்கள் அரசு, நமது அரசு! என்று கனிவோடு வேண்டுகோள் வைத்து வந்தோம்.
ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!
உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.
டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா? Yellow Pumpkin Dosa Recipe!
ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து அலுத்துவிட்டவர்களுக்காக, பல விதமான தோசை ரெசிபிகளை கொடுத்து வருகிறோம். மீல் மேக்கர் தோசை, இன்ஸ்டன்ட் மேகி தோசை வரிசையில், மஞ்சள் பூசணி தோசை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம். அதனுடனே, செட்டிநாடு ஸ்பெஷல் பச்சை மிளகாய் மண்டி எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து! உதயநிதி காரை மறித்து போராட்டம்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஸ்டிரைக் அறிவிப்பு!
சென்னையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இன்று(13.11.2024) காலை பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இடர்களைக் களையும் கடைமுகம்! துன்பங்கள் போக்கும் துலாக் குளியல்! பாவம் தீர்க்கும் காவிரி நீராடல்!
ஐப்பசி மாதத்தை “துலா மாதம்’ என்பர். இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருப்பதால் இதற்கு துலா (தராசு) மாதம் என்று பெயர் வந்தது. ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தேவ நதியாக இருந்த கங்கையை பகீரதன் தனது தவ வலிமையால் பூமிக்குக் கொண்டு வந்தார் என்பது ஐதீகம்.
