நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா? என்னவாகும் தெரியுமா? உஷார் ரிப்போர்ட்!

0
53
தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற அடிப்படையில், முட்டை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முட்டையில் அதிகம் புரோட்டீன் இருப்பதால், பெரும்பாலானோர் அதை தினசரி உணவில் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், தினமும் 38 கிராம் முட்டை சாப்பிடுபவர்களுக்கு 25 சதவிகிதமும், தினமும் 50 கிராம் முட்டை சாப்பிடுபவர்களுக்கு 60 சதவிகிதமும் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனா மற்றும் கத்தார் மருத்துவப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தினந்தோறும் முட்டை சாப்பிடுவபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியம் 60 சதவிகிதம் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் British Journal of Nutrition உள்ளிட்டவைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : 1. Egg consumption as part of an energy-restricted high-protein diet improves blood lipid and blood glucose profiles in individuals with type 2 diabetes

2. An egg a day can trigger diabetes too, warn researchers

தினசரி முட்டை சாப்பிடும், சராசரியாக 50 வயதைத் தொட்ட 8,545 பேரிடம் சீனா மற்றும் கத்தார் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயும், முட்டைக்கும், நீரிழிவு நோய்க்குமான அதிகபட்ச தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.   உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, உலக மக்கள் தொகையில் 6 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் பாதிப்பு விகிதம் இரண்டு மடங்காகி உள்ளது. டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கு, உணவு முறையே முக்கிய காரணியாக இருக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry