இந்திரா ‘கண்டி’, இந்திரா ‘காந்தி’ என மாறியது எப்படி? இந்திரா பிரியதர்ஷினியின் 103-வது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!

0
176

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இரும்புப் பெண்மணியாக நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் வழிநடத்தியது நினைவுகூரத்தக்கது.

தமது அரசியல் வாரிசாக இந்திரா பிரியதர்ஷினியை வார்த்தெடுத்த ஜவஹர்லால் நேரு, மும்பையைச் சேர்ந்த பார்ஸி இனத்தவரான ஃபெரோஸ் ஜஹாங்கீர் கண்டி என்பவருக்கு, மார்ச் 26, 1942-ல் இந்திராவை மணமுடித்து வைத்தார். பத்திரிகையாளரான ஃபெரோஸ் ஜஹாங்கீர் கண்டி, பின்னர் அரசியல்வாதியாக உருவெடுத்தார். 1952-ல் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு அவர் தேர்வானார். இதனால் அவர் அங்கேயே தங்க வேண்டியிருக்க, இந்திரா, டெல்லியிலும், உ.பி.யிலும் மாறி மாறி தங்கி வந்தார்.இந்திராவின் தேவை அதிகரிக்கவே, மாப்பிள்ளையை டெல்லிக்கே வரவழைத்தார் நேரு.

Wikipedia Source : Feroze Jehangir Ghandy to Feroze Gandhi 

இது இந்திராவின் ஆரம்பகால வாழ்க்கையின் சுருக்கம். தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குடும்பத்துக்கு, ஃபெரோஸ் காந்தி உறவினர் என்பதே பலரது நம்பிக்கை. இதனால், ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் காந்தியின் உறவினர்கள் என்ற நம்பிக்கையும் பரவலாக காணப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நேரு-காந்தி குடும்பம், ஏன் அந்த பெயரில் அழைக்கப்பட்டது என்பதை அறிய வேண்டியது அவசியம்.

அடிப்படையில் காந்தியும், நேருவும் பல விவகாரங்களில் முரண்பட்டவர்கள். காந்தி எப்போதும் குடும்ப அரசியலை ஆதரித்தவர் இல்லை. ஆனால் நேரு அவருக்கு நேர் எதிரானவர். காந்தி அரசியலில் இருந்து விலகியே இருந்தவர், ஆனால், நேரு குடும்பம் அரசியலை தொழிலாக ஏற்றது. காந்தி எப்போதும் பதவி மோகம் கொண்டவராக இருந்ததில்லை, ஆனால் நேரு குடும்பம் எப்போதும் அதிகாரப் பசி கொண்டதாக இருந்து வருகிறது.

ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் என  மகாத்மா காந்திக்கு நான்கு மகன்கள். இவர்களது சந்ததியினர் சுமார் 154 பேர், டாக்டர்களாகவும், பேராசியர்களாகவும், பொறியாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், நாசாவில் விஞ்ஞானியாகவும் பல வெளிநாடுகளில் வசிக்கின்றனர். காந்தியின் பேரன்கள் ராஜ்மோகன் காந்தி, கோபால் கிருஷ்ண காந்தி, துஷார் காந்தி எனச் சிலர் அரசியலில் கால்பதிக்க முயன்றும், அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை.

இங்குதான், நேரு குடும்பத்துக்கு, காந்தி என்ற இணைப்புப் பெயர் (Sur Name)எப்படி வந்தது, அது, அரசியலில் அவர்களுக்கு எந்த அளவுக்கு பலன் கொடுத்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஃபெரோஸ் ஜஹாங்கீர் காந்தி பற்றி ஸ்வீடிஷ் எழுத்தாளர் ஒருவர் ‘Feroze The Forgotten Gandhi’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில், ஃபெரோஸ் பிறப்புச் சான்றின் அடிப்படையில், 1912, செப்டம்பர் 12-ல், ஜஹாங்கீர் ஃபர்தூன் கண்டி – ரதிமாய் கண்டி தம்பதிக்கு ஃபெரோஸ் ஜஹாங்கீர் கண்டி பிறந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

பிறப்புச் சான்றில், ஆங்கிலத்தில், FEROZE JAHANGIR GANDHY என இருந்ததாக அவர் எழுதியுள்ளார். ஆனால் அவரது தந்தையின் பெயர் ஆங்கிலத்தில் JEHANGIR FAREDOON GHANDY என்றே எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஃபெரோஸூக்கு மட்டும் GHANDY என்பதை GANDHY என மருத்துவமனை பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் தவறுதலாக இவ்வாறு எழுதினார்களா? அல்லது, மாற்றி எழுத வைக்கப்பட்டனரா? என்பது தெரியவில்லை.

ஃபெரோஸ் கண்டி அரசியலில் நுழைந்து வளர்ந்து வரும்போது, நாளிதழ்கள் அவரது பெயரை ஃபெரோஸ் காந்தி (GHANDY to GANDHI) என குறிப்பிடத் தொடங்கின. உதாரணமாக போராட்டம் ஒன்றி்ல் அவர் கைதானபோது, ‘The Leader’ என்ற ஆங்கிலப் பத்திரிகை Feroze Ghandy as Feroze Gandhi என எழுதியது.

இதன் பிறகே ஃபெரோஸ் கண்டி, ஃபெரோஸ் காந்தியானார். அவரை மணந்த இந்திரா நேரு, இந்திரா காந்தியானார். இதன் தொடர்ச்சியாக இந்தத் தம்பதியின் மகன்கள் சஞ்சய் காந்தியாகவும், ராஜிவ் காந்தியாகவும் ஆனார்கள். இப்படி வழி வழியாக ஃபெரோஸின் குடும்பத்தோடு காந்தி என்ற பெயர் இணைத்துக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் ஃபெரோஸ் ஜஹாங்கீருக்கும், தேசத் தந்தை காந்திக்கும் ரத்த உறவு இல்லை என்பது தெளிவாகிறது.  பிறந்தவுடன் ஃபெரோஸ் கண்டியாக பெயர்சூட்டப்பட்டவர், அரசியலில் வளர்ந்தபிறகு ஃபெரோஸ் காந்தியான வரலாறு இதுதான். இந்த இணைப்புப் பெயர், இவரது குடும்பத்தினர் அரசியலில் கோலோச்ச பெருமளவில் உதவி வருகிறது என்பதை மறுக்க முடியாது.

Source : DNA

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry