சித்த மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கும், வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் வாசித்தவர்களுக்கும் ‘ஏழிலைப்பாலை’ எனும் பெயர் பரிச்சயமாக இருக்கும். வாசிப்பில் காதல் கொண்டோரை மகிழ்விக்க, அதே பெயரிலான புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட இருக்கிறது.
அது என்ன ஏழிலைப்பாலை?
மருத்துவ குணம் நிறைந்த மரம்தான் ஏழிலைப்பாலை. நம் முன்னோர் எந்த ஆய்வுக்கூடமும் இல்லாமல், ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல், அனைத்துவித காய்ச்சல் நோய்களுக்கும் சரியான மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தியுள்ளனர். அவற்றில் மலேரியா காய்ச்சலை ‘ஏழிலைப்பாலை’ மரத்தின் பட்டையைக் கொண்டு குணப்படுத்தியுள்ளனர். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது ஏழிலைப்பாலை.
‘வேள்பாரி’யில் ஏழிலைப்பாலை
“வீரயுக நாயகன் வேள்பாரி”யில் வார்த்தைகளால் ஓவியம் வரைந்திருப்பார் சு.வெங்கடேசன். அவர் வார்த்தைகளால் வரைந்த ஓவியத்திற்கு, தூரிகைகளால் உயிர் கொடுத்திருப்பார் ஓவியர் மணியம் செல்வன். முருகன், வள்ளியின் காதல் “ஏழிலைப்பாலை” மரத்தின் அடியில் ஆரம்பித்து, ”சந்தனவேங்கை” மரங்களால் அமைத்த பரணில் தழைப்பதை வர்ணித்திருப்பார் சு.வெங்கடேசன்.
ஏழிலைப்பாலை புத்தகத்தில் எல்லாமே ஸ்பெஷல்
ஏ4 அளவில் 250 வண்ணப் பக்கங்களில் பொங்கலன்று வெளியாகிறது ஏழிலைப்பாலை நூல். வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் படித்து சொந்தங்களாய் ஒன்று கூடிய வாசகர்கள் இணைந்து உருவாக்கும் நூல் இது. ஓவியர் மணியம் செல்வத்தின் அட்டைப்படத்துடன் வெளிவர இருக்கும் இந்நூலில், எழுத்தாளரும், எம்.பி.,யுமான சு.வெங்கடேசனின் பளீர் சுளீர் கேள்வி பதில்கள், மணியம் செல்வத்துடன் உரையாடல், மருத்துவர் கு.சிவராமனின் அனுபவக் கட்டுரைகள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் கார்த்திக் நேத்தா, கவிஞர் இசையின் அற்புதமான கவிதைகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனின் சூழலியல் கட்டுரை, எழுத்தாளர் நீலா மற்றும் பேச்சாளர் மானசீகனின் வசீகரிக்கும் கதைகள், தொழிலதிபர் திருப்பதி வாசகனின் பாங்காங் பயணக் கட்டுரை, இவற்றுடன் பல படைப்பாளர்கள் விருந்துகள் படைக்கின்றனர்.
உங்கள் ஊர் நூலகத்திற்கு நீங்கள் இந்நூலை பரிசளிக்க விரும்பினால், ஒரு நூலுக்கான முன்பதிவு மட்டும் செய்தால் போதும். ஒரு நூல் உங்களுக்கு, ஒரு நூல் நூலகத்திற்கு. பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுவோம்.
புத்தகங்களை முன்பதிவு செய்ய : 99440 41999 (முன்பதிவு விலை 250/-)
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry